கிராமங்களை மின் மயமாக்கும் திட்டத்தில் குஜராத் மாநிலத்தில் 35 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. தமிழகம் 100 சதவீதம், அதாவது அனைத்து கிராமங்குளுக்கும் மின் வசதி அளித்துளது.
அதுபோல மரபு சாரா எரிசக்தி, அரசு நிலையங்களில் மின் உற்பத்தி ஆகியவற்றில் குஜராத்தை விட தமிழகம் அதிக மின் உற்பத்தி மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் ந்ரேந்திரமோடி முதல்வராக இருக்கும், குஜராத் மாநிலம் மின் துறையில் முதலிடம் பெற்றுள்ளதாக பா.ஜ.கவினர் பரப்புரைச் செய்து வருகின்றனர்.
ஆனால், குஜராத் மாநில மின் துறை, மின்சார ஆணையத்துக்கு அளித்த தகவல் படி கடந்த நிதியாண்டில் 30 லட்சம் யூனிட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படதாகக் கூறப்பட்டுள்ளது. மாதாந்திர மின் விநியோகம் தொடர்பான அறிக்கையில், கடந்த நிதியாண்டில் 88,488 மில்லியன் யூனிட் மின்சாரம் விநோகித்துள்ளதாக குஜராத் மிந்துறை தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் அதிகமுள்ளதால் தமிழகத்துக்கு மாதத்துக்கு குறைந்தது 8,425 யூனிட் மின்சாரம் தேவைப்படுவ்தாக தமிழக மின் துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தை விட குறைவாக குஜராத் அரசுக்கு மாதந்தோறும் 7,042 மில்லியன் யூனிட் மட்டுமே தேவைப்படுகிறது.
மத்திய மின் தொகுப்பு இணைப்பு மூலம் தேவையான மின்சாரம் வாங்கும் வசதி குஜராத்துக்கு உள்ளது.தமிழக அரசால் 1000 மெகாவாட் மட்டுமே வெளி மாநிலத்தில் மின்சாரம் வாங்க முடியும் என்ற நிலையிலேயே மின் தொகுப்பு இணைப்பு உள்ளது.
குஜராத் அரசுக்கு மத்திய அரசின் மின் நிலையங்களிலிருந்து, 3467 மெகாவாட் மின்சாரம் நிரந்தர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், குஜராத்தைவிட தேவை அதிகமாக தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிரந்தர ஒதுக்கீடாக 3,117 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.
உற்பத்தியைப் பொறுத்தவரை குஜராத் மாநில அரசு நிலையங்களில் இருந்து 7,220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.மேலும் 11,980 மெகாவாட் மின்சாரம் உற்பத்திச் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7,598 மெகாவாட் மின்சாரம் அரசு நிலையங்களில் உற்பத்தியாகின்றன. அதேபோல், 9287 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகும் அளவுக்கு தனியார் மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை மரபுசாரா எரிசக்தி உற்பத்தியாகும்.குஜராத்தில் பெரும்பாலான அனல் நிலையங்கள் தனியார் வசமே உள்ளன.
சூரிய மின்சக்தி, காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க, சுற்றுச்சூழல் மாசுபடாத மின் உற்பத்தியில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 40.2 சதவீதம் மரபுசாரா எரிசக்தியில் பெறப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் 7,119 காற்றாலை நிலையங்களும், 20 மெகவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியும், உயிரிக்கழிவு மூலம் 204 மெகாவாட், பசுமைக் கழிவு மின் உற்பத்தியில் 659 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது.
குஜராத்தில் காற்றாலை மின் ந்லைய நிறுவு திறன் 3,164 மெகாவாட்டாகவே உள்ளது. இது தமிழக காற்றாலை மின் திறனில் பாதி அளவாகும்.குஜராத்தில் சூரியசக்தி, உயிரிக் கழிவு மற்றும் பசுமைக் கழிவு மூலம் மொத்தம் 894 மெகாவாட் மட்டுமே உற்பத்தி திறன் உள்ளது.
கிராமங்கள் மின் மயமாக்கல் திட்டத்தில் குஜராத்தில் மொத்தமுள்ள 18066 கிராமங்களில் 18031 கிராமங்களுக்கு மட்டும் மின் வசதி கிடைத்துள்ளது. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கவில்லை. தமிழகத்தில் மொத்தமுள்ள 15,400 கிராமங்களில் அனைத்துக்கும் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக