ஜப்பானின் பீச் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று 59 பயணிகளுடன் இஷிகாகி தீவுகளிலிருந்து ஒகினவாவில் உள்ள நாஹா தீவுக்கு சென்றுள்ளது. ஒகினவாவை நெருங்கிய போது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த உத்தரவை தவறாக புரிந்துகொண்டு விமானம் ரன்வே அருகே வந்துவிட்டதாக எண்ணிய விமானி, விமானத்தை கீழே இறக்கியுள்ளார்.
ஆனால் அவர் விமானத்தை கடலை நோக்கி கீழே இறக்கியுள்ளார். கடலுக்கு மேலே சுமார் 75 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. உடனடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து எச்சரிக்கை வரவே மீண்டும் விமானத்தை மேலே எழுப்பியுள்ளார் விமானி.
பின்னர் சிறிது நேர பயணத்திற்கு பின் விமானம் பத்திரமாக ஒகினவாவில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 53 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் எவ்வித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பீச் விமான நிறுவனம், இப்பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக