திங்கள், ஏப்ரல் 21, 2014

பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு: கிரிராஜ் சிங் மீது எப்ஐஆர் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய  முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள  மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பற்ற பேச்சு பா.ஜ. கண்டிப்பு: பீகாரைச் சேர்ந்த முன்னாள்  அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில்  போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர்.  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது,  ‘மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள்  தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விடவேண்டும்’  என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியிருந்தார். இதை காங்கிரஸ்  மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல்  ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. 

இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும்  ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. இந்நிலையில், பீகார் மாநில பாஜ  தலைவர் சுஷில் குமார் மோடி கூறும்போது, ‘முன்னாள் அமைச்சர்  கிரிராஜ் சிங்கின் பொறுப்பற்ற பேச்சை பாஜ ஏற்காது, அவருடைய  கருத்து பாஜவின் கருத்து அல்ல’ என்று நிராகரித்து விட்டார். 
காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு  குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ்  பொதுச்செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள  கடிதத்தில், ‘கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. 

கிரிராஜ் சிங்கின்  பேச்சால் அதிருப்தி அடைந்த பாஜ, இனிமேல் சர்ச்சைக்குரிய  பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்’ என்று கட்சியினருக்கு அறிவுரை  கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக