புதன், ஏப்ரல் 30, 2014

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19–வது லீக் ஆட்டத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 
இதன் படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரகானே 59 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி தரப்பில் வினய் குமார் 30 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் 153 ரனக்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியில் கம்பீரும் பிஸ்லாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மோசமான பார்மில் இருந்த கம்பீர் இந்த ஆட்டத்தில் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த கலீஸ் 13 ரன்களும் மனிஷ் பாண்டே 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  

13.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 88 ரன்களாக இருந்த போது 45 ரன்கள் எடுத்து இருந்த கம்பீர் அவுட் ஆனார். பின்னர் யாதவ் (31) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தர். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 20 ஓவரில் கொல்கத்தாவும் 152 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. 

இதன் பின்னர் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றபட்டது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட ஒரு ஓவரில்  11 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியும் 11 ரன்கள் எடுத்ததால் அதிக பவுண்டரி அடித்த அணியான ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக