குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதைத் தடுப்பதற்காக, மத்தியில் 3வது அணியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மோடி பிரதமராவதற்கு பெரிய அளவில் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸ விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மோடிக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு கிடைக்காது.
அப்போது, 3ஆவது அணியுடன் சேர்ந்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று பிருதிவிராஜ் சவாண் தெரிவித்தார்.
"மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது" என்று அவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பிராந்தியக் கட்சிகள் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க வாய்ப்புள்ளதால் தாம் அவ்வாறு கூறியதாக பதிலளித்தார். இதுகுறித்து அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், இதற்காக அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்றும் பிருதிவிராஜ் சவாண் விளக்கம் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக