ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

ராம்தேவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை ஆராய தேர்தல் ஆணையம் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளுக்காக யோகா குரு ராம்தேவின் 3 அறக்கட்டளைகள் பெரிய அளவில் செலவு செய்திருப்பதாக வந்த புகார்களையடுத்து அந்த அறக்கட்டளைகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும்படி வருமான வரித்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் டி.செந்தில் பாண்டியன் வியாழக்கிழமை கூறுகையில், "கடந்த மாதங்களில் வங்கிகள் மூலம் ராம்தேவ் அறக்கட்டளை மேற்கொண்ட வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்யும்படி வருமான வரித்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
மக்களவைத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளுக்காக ராம்தேவின் 3 அறக்கட்டளைகள் பெரிய அளவில் செலவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த ஆய்வு நடைபெறுகிறது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக