செவ்வாய், மார்ச் 22, 2011

கிறிஸ்தவ பாதிரிமார்களின் வெறித்தனம்,அமெரிக்க தேவாலயத்தில் முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆன் எரிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன்  எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
குர்ஆன்  குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக அந்த தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பவரால் குர்ஆன்

கொளுத்தப்பட்டுள்ளது.
 

"டெர்ரிஜோன்ஸ்"ஏற்கனவே,கடந்தஆண்டு,செப்டம்பர்11ஆம்,தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று 
குர்ஆனை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக