செவ்வாய், மார்ச் 22, 2011

இந்திய நாட்டை தவறான பாதைக்கு வழி நடத்தினார் மன்மோகன் சிங்:ஜூலியன் அஸேஞ்ச்!


பார்லிமென்ட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது மூலம் நாட்டை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றுள்ளார் பிரதமர் ‌மன்மோகன்சி்ங் என விக்கலீக்ஸ்இணையதள ஆசிரியர் ஜூலியன் அசேஞ்ச் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் டி.வி. சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கூறியதாவது: அமெரிக்க ராணுவம் தொடர்பாக நான் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் உண்மைதான் ‌என அமெரிக்காவே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
அதே போன்று தான் இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு பார்லிமென்ட்டில் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது எம்.பிக்கள் பலர் விலைபேசப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ‌கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இவை பிரதமரை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.
எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததன் மூலம் இந்திய மக்களை தவறாக வழிநடத்தி விட்டார் மன்மோகன்சி்ங்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பா.ஜ.வின் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், பிரதமர் மன்மோகன்சிங் பார்லிமென்டில் தவறாகன தகவல் தந்துள்ளார். அவர் மீது உரிமை மீறல்பிரச்னை எழுப்புவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக