செவ்வாய், மார்ச் 22, 2011

" பொய் கூறுகிறார் பிரதமர் " - எதிர்கட்சிகள் புகார்: பார்லி.,யில் பிரதமர் மீது உரிமை மீறல் தீர்மானம்

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் தனது அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு பணம் கையூட்டாக வழங்கபட்டது தொடர்பாக பிரதமர் தவறான தகவல் அளித்ததாக அவர் மீது பார்லி.,யில் பா.ஜ., உள்பட எதிர்கட்சிகள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே காரசார வாக்குவாதம் நடந்ததால் பார்லி.,யின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.


கடந்த 2008 ம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இடதூரிகள் தங்களுடைய ஆதரவை விலக்கி கொண்டதையடுத்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எம்.பி.,க்களின் ஆதரவை பெறுவதற்கு ரூ. 10 கோடி வரை லஞ்சம் வழங்கபப்பட்டது என விக்கலீக்ஸ் செய்தி வெளியிட்டது.
யாருக்கும் லஞ்சம் வழங்கப்படவில்லை இந்த செய்தி தவறானவை என்றும், இவை யூகங்கள் அடிப்படையிலானவை என்று கடந்த வாரம் நடந்த பார்லியி.,ல் பிரதமர் விளக்கமளித்தார். ஆனால் லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக எதிர்கட்சிகள் கூறியிருந்தன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் என்றும், லஞ்சம் பெற்றது தொடர்பாக கிஸ்ரோ சந்திரோதயா கமிட்டி உறுதி செய்துள்ளது. ஆனால் பிரதமர் பொய் கூறுகிறார். இவர் மீது உரிமை மீறல் கொண்டு வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் அவையில் தெரிவித்தார். இதனால் எதிர்கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பா.ஜ.,வெளிநடப்பு செய்தது: தொடர்ந்து எழுந்த அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நிதிநிலை மீதான விவாதம் முடிந்த பின்னர் விவாதிக்கலாம் என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப். இதனை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்தன. இப்போதே விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பா.ஜ., ‌வலியுறுத்தின. இதற்கு இடதுசாரி கட்சியினரும் ஆதரவ தெரிவித்தனர். அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பா.ஜ., அவையில் ‌இருந்து வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து லோக்சபா இது தொடர்பான விவாதத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சபாநாயகர் மீராகுமார் முடிவு செய்வார்.

இன்றைய அவையில் லிபியா மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது அயல் நாட்டு விவகாரம் இது குறித்து பிரச்னை எழுப்ப முடியாது என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக