இந்தோனேசியாவில் பருவமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது அங்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கால் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக ஜாவா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள பஞ்சனேகரா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 105-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. உடனே ராணுவ வீரர்களும், மீட்புக்குழுவினரும் விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கிய 379 பேரை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
இருப்பினும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 108 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. நிலச்சரிவு காரணமாக ஜம்புளிங் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக