ஞாயிறு, டிசம்பர் 07, 2014

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனேயை வீழ்த்தியது டெல்லி


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டித் திருவிழாவில் நேற்றிரவு புனேயில் நடந்த 51-வது லீக்கில் டெல்லி டைனமோஸ்- புனே சிட்டி அணிகள் மோதின. நீண்ட நேரம் கோல் இல்லாமல் நகர்ந்த இந்த ஆட்டத்தில், 88-வது நிமிடத்தில் டெல்லி வீரர் டாஸ் சான்டோஸ் கோல் அடித்து முட்டுக்கட்டையை தகர்த்தார். அதுவே வெற்றி கோலாக அமைய டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி (4 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி)17 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் ஆட உள்ள புனே அணியின் (4 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 16 புள்ளி) அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்றிரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் களம் காணுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக