திங்கள், டிசம்பர் 22, 2014

கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி: சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான்


நாதுராம் கோட்சேயை புகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான் கடுமையாக தாக்கியுள்ளார். நாதுராம் கோட்ஸே நாட்டின் முதல் பயங்கரவாதி என்று கூறியுள்ள அவர், மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை "மகிமைப்படுத்தும்" இந்து மகா சபாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தனது பொறுப்பை உணராமலும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பேசிய உத்திரப்பிரதேச கவர்னர் ராம் நாயக்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலகப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது பற்றி அசம்கான் கூறுகையில், ஒரு போதும் மோடி அவ்வாறு செய்யமாட்டார். நாட்டில் அதிபர் ஆட்சி முறையை விரும்பும் மோடி, அதை சாதிக்கும் விதமாக அரசியல் சட்டத்தில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்று அவர் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக