ஞாயிறு, டிசம்பர் 07, 2014

முசாபர்நகர் வன்முறை: 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தில் கடந்த 2013ம் ஆண்டு முசாபர்நகரில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அடையாளம் காண தவறியதற்காக 3 வருவாய் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் கடந்த 2013ம் ஆண்டு வன்முறை வெடித்தது.  இதில் ஹசன்பூர் கிராமத்தில் இருந்தவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றனர்.  உத்தர பிரதேச மாநில அரசு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்தது.  இதற்காக வருவாய் துறை அதிகாரிகள் சிலர் இழப்பீடு வழங்க தகுதியான நபர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க நியமிக்கப்பட்டனர்.

ஆனால் ஹசன்பூர் கிராமத்தை சேர்ந்த 101 பேர் இந்த பட்டியலில் விடுபட்டனர்.  இந்நிலையில், மாநில அரசு இழப்பீடு பெற தகுதியான நபர்கள் குறித்த விவரத்தை அறியும் பணியில் மீண்டும் ஈடுபட்டது.  இதில் விடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த பணியை செய்வதற்கு தவறியதற்காக வருவாய் துறையை சேர்ந்த மதன் ரத்தோர், நக்லி சிங் மற்றும் அனுஜ் ஷர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  இதே போன்று பணியினை செய்ய தவறியதாக மற்றொரு அதிகாரி ராமோதர் சிங் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக