புதன், டிசம்பர் 24, 2014

இந்தியாவின் பலஸ்தீன ஆதரவு வாபஸ்? – மனித நேய மக்கள் கட்சி கண்டனம்

மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
விடுதலைப்பெற்ற காலத்திலிருந்து தொடர்ச்சியாக ஐ.நா. மன்றத்தில் பாலஸ்தீனத்திற்கு அளித்து வந்த ஆதரவை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறு பரிசீலனை செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

காந்தியடிகளின் நிலைப்பாட்டின் காரணமாகதான் 1947–ம் ஆண்டு ஐ.நா. பொதுமன்றத்தில் பாலஸ்தீனத்தை பிளவுப்படுத்தி இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானம் 181 முன்மொழியப்பட்ட போது இந்தியா அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. அப்போது முதல் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்து வந்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றப்போவதாக மோடி தலைமையிலான ஆட்சி எடுத்துள்ள முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகள் பெயரில் தூய்மை இந்தியா திட்டத்தை நடத்தும் மோடி அரசு காந்தியடிகளின் மத சார்பின்மை கொள்கையை கைவிட துடிப்பது போல் தற்போது அவர் வகுத்த வெளியுறவுக்கொள்கையையும் புதைக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக