திங்கள், டிசம்பர் 22, 2014

மதமாற்றம் சம்பவம்: விசுவ இந்துபரிஷத் மீது பிரதமர் மோடி அதிருப்தி

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சமீபத்தில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பா.ஜனதா ஆளும் மாநிலமான குஜராத் மற்றும் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கேரளாவில் கிறிஸ்தவர்கள் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஆரணை கிராமத்தில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்த மிகப்பெரிய மத சடங்கு நிகழ்ச்சியில் 500 பழங்குடியின கிறிஸ்தவர்கள் இந்துவாக கட்டாய மத  மாற்றம் செய்யப்பட்டனர். 

இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு ‘கர் வாபசி’ (வீடு திரும்புதல்) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பிற மதத்தினர் இந்து மதத்துக்கு திரும்ப விரும்பினால் அவர்களை இந்துவாக மதம் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தது.

அதன்படி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் 225 கிறிஸ்தவ பழங்குடியின மக்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.

இதுபோல கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாடு அருகே உள்ள கனிச்சநல்லூர் கிராமத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விசுவ இந்து பரிஷத் செய்தது. அங்குள்ள கோவிலில் இதற்காக யாகம் வளர்த்து 30 பேரும் இந்துவாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்  . அவர்களுக்கு வேத புத்தகங்கள் மற்றும் கடவுள்களின் படங்கள் வழங்கப்பட்டன.

நேற்று நடந்த மிகப்பெரிய மதமாற்ற நிகழ்வுகளால் பிரதமர் நரேந்திர மோடி விசுவ இந்து பரிஷத் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக