திங்கள், டிசம்பர் 15, 2014

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜெர்மனி அணி சாம்பியன்

சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்கள் நேற்று ஆபாசமான நடத்தையுடன் வெற்றியை கொண்டாடியதால் அவர்களில் 2 பேருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாட்டத்தில் இன்று பாகிஸ்தான் - ஜெர்மனி அணிகள் மோதியது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கிறிஸ்டோபர் வெஸ்லி முதல் கோலை அடித்தார். தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த ஜெர்மனி அணி 57-வது நிமிடத்தில் புளோரியன் அடித்த 2-வது கோலால் பாகிஸ்தானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டநேர முடிவு வரை பாகிஸ்தான் கோல் எதுவும் அடிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக