ஞாயிறு, டிசம்பர் 14, 2014

தாய் விமான பணிப்பெண் முகத்தில் வெந்நீரை ஊற்றிய சீனப் பெண் பயணி

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த வியாழன் அன்று மாலை 174 பயணிகளுடன் தாய்லாந்திலிருந்து கிழக்கு சீனாவில் நான்ஜிங் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் தனது ஆண் நண்பருடன் பயணித்த சீனப் பெண் பயணி ஒருவர், இரண்டு பேருக்கும் அருகருகே இடம் கொடுக்காததை கண்டித்து விமானத்தின் பெண் ஊழியர் மீது வெந்நீர் ஊற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். மேலும், விமானத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டினார்.

முதலில் ஒரு கிண்ணத்தில் நூடுல்ஸ் வாங்கிய அந்தப் பெண், பின்னர் அதே கிண்ணத்தில் வெந்நீர் கேட்டுள்ளார். சூடான தண்ணீரை பணிப்பெண் குடுத்தாள்ளார். அதைக் கொண்டு வந்த பணிப்பெண்ணின் முகத்திலேயே சீனப் பயணி ஊற்றினார். *இதையறிந்த விமான பைலட், டான் முவாங் விமான நிலையத்தில் விமானத்தைக் தரையிறக்கினார். பின் அந்த இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெந்நீர் ஊற்றப்பட்ட விமான பணிப்பெண் ஊழியர் தற்போது நலமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்தது. வெளிநாடுகளில் எவ்வாறு நடத்துகொள்வதென்று தங்கள் நாட்டு மக்களுக்கு கற்றுத்தர வேண்டுமென்று சமீபத்தில் சீனத்தூதரகத்தில் நடந்த சந்திப்பில் சீன ஜனாதிபதி பேசியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக