சனி, டிசம்பர் 27, 2014

பாபர் மசூதி வழக்கு: தந்தையின் வழியில் நீதிக்கான எனது போராட்டம் தொடரும் முஹம்மது உமர்

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில் கடந்த 1949-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. 

இதில், முஸ்லிம்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த 7 பேரில் பரூக் அஹமது என்பவர் நேற்று காலமானார். அயோத்தியில் வாழ்ந்து வந்த இவர், தனது 100வது வயதில் காலமானார். 

இதையடுத்து, இந்த வழக்கில் வாதியாக இருந்து மரணமடைந்த பரூக் அஹமதின் இளைய மகனான முஹம்மது உமர்(45) என்பவர் இவ்வழக்கின் வாதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறைப்படியான அறிவிப்பை பாபர் மசூதி செயல்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உ.பி. மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான ஜஃபர்யப் ஜிலானி வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் நியாயம் கிடைக்க என் தந்தையின் வழியில் நீதிக்கான எனது போராட்டம் தொடரும் என முஹம்மது உமர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக