சனி, டிசம்பர் 27, 2014

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால் 69 ஆயிரத்து 549 பேர் பாதிப்புக்குள்ளாகி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் கேளந்தான் மாநிலம்தான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 9 மாவட்டங்களில் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தாற்போல் தெரெங்கானு மாநிலத்தில் இருந்து 29 ஆயிரம் பேரும், அங்குள்ள கேமமான் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழையினால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் 47 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக