திங்கள், டிசம்பர் 29, 2014

மலேசியா, தாய்லாந்தில் கனமழைக்கு 24 பேர் பலி

மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

மலேசியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். மேலும் அங்கு மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மலேசியாவில் உள்ள கேளந்தான் உள்பட 5 மாநிலங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஹாவாய் தீவில் சுற்றுப் பயணம் செய்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தனது சுற்றுப் பயணத்தை இடையில் ரத்து செய்து விட்டு மலேசியா திரும்பினார்.

வடகிழக்கு மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வருடந்தோறும் கனமழை பெய்யும். ஆனால், இந்த வருடம் அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. கேளந்தான் மற்றும் தெற்கு தாய்லாந்தில் இன்னும் ஒருவாரம் மழை நீடிக்கும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் மத்தியில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் தெற்கு தாய்லாந்தின் எல்லையோரம் 14 பேர் பலியாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக