செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் :மூன்றாவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவையில் 87 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல்களில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரின் மூன்று மாவடங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 

 முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். இதே போல் ஜார்கண்டில் மாவோஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த கோடர்மா, பர்கதா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக