வெள்ளி, டிசம்பர் 12, 2014

கட்டாய மத மாற்றம்: 17-ம் தேதி பாராளுமன்றத்தில் விவாதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா, அலிகர் உள்ளிட்ட பல இடங்களில் சமீபத்தில் சில துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
அதில், இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லிமுக்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

பாராளுமன்ற மேல்சபையில் கட்டாய மத மாற்றம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இது தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வரும் 17-ம் தேதி இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக