வெள்ளி, நவம்பர் 30, 2012

தப்லீக் ஜமாத்தினர் மீது போலீஸ் அடக்குமுறை : மில்லி கவுன்சில் அவசரக்கூட்டம்!

ஜமாத்தினரை, ஓடும் ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கி "கையில் விலங்கு மாட்டி" இழுத்துச்சென்றது குறித்து, ஆலோசிக்க "ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின்" அவசரக்கூட்டம் டெல்லியில் நேற்று (29/11) மாலை நடைபெற்றது.

அஸ்ஸாம் முதல்வர் பேட்டி : முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்கிறது !

அஸ்ஸாமில் ஒரே ஒரு "வங்கதேசத்தவர்" கூட இல்லை என, அஸ்ஸாம் மாநில முதல்வர் "தருண் ககோய்" தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள அஸ்ஸாம் பவனில் நேற்று (29/11) செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதல்வர், மாநிலத்தில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு வங்கதேசத்தவர் கூட கண்டு பிடிக்கப்படவில்லை, என

நீயா ? நானா ?... நடு வானில் வாய்ச்சண்டையில் குதித்த 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் !!!

மும்பை: விமான பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டுகள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை

ஃபேஸ்புக் பெண் கைது: மகாராஷ்ட்ர அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பால்தாக்கரே குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக 2 பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற மறுதினம்,   மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது. இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில், “தாக்கரே

எகிப்து அரசியல் சாசனத்திற்கு ஷரீஅத் அடிப்படையாக தொடரும் !

கெய்ரோ:அரசியல் சாசன உருவாக்கத்திற்கு முக்கிய அடிப்படையாக ஷரீஅத்தின் தத்துவங்கள் தொடரும் என்று எகிப்தின் அரசியல்  நிர்ணய சபை முடிவுச் செய்துள்ளது. முந்தைய அரசியல் சாசனத்தில் தொடரும் ஷரீஅத் தொடர்பான வார்த்தையை நீக்க தேவையில்லை என்று முடிவு

ஃபேஸ்புக்கில் கருத்து: பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது !

மும்பை:சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது, சிவசேனை மீதான பயம் காரணமாகவே முழு அடைப்பு என்றும், உண்மையான மரியாதைக்காக அல்ல என்றும் பேஸ்புக்கில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் பெண்கள்

பாஜகவை தவிக்கவிட்டு வெளியேறினார் எதியூரப்பா !

பெங்களூர்:பா.ஜ.கவில் எதிர்ப்பாளர்களின் தலைவரும், முன்னாள் கர்நாடகா மாநில முதல்வருமான எடியூரப்பா, கட்சி மற்றும் சட்டப்பேரவையில் இருந்து இன்று ராஜினாமாச் செய்கிறார். நாற்பது ஆண்டுகளாக கட்சிக்கும், அவருக்கும் இடையே தொடரும் உறவு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆதரவாளர்களுடன் விதான சபாவிற்கு வந்து தனது

உலகின் அதி வேக ரயில் இதுதான் – இப்போதைக்கு !

சைனா அறிமுகபடுத்திய வாள் போன்ற வடிவமைப்புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆரம்ப வேகம் 350 கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ரயில் கடைசியில் ஒரு விபத்தினால் 300 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போது ஜப்பான் அதை நிஜமாக்கிரது. மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் ஜே ஆர் டோகாய் – மாக்லேவ் ரெயில்

சேலம், தர்மபுரி மாவட்டங்களை உலுக்கிய 'சூறாவளி' இரைச்சலுடனான நிலநடுக்கம் !

சேலம்: சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலி 3.3அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இன்று அதிகாலை 3.50 மணியவில் சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளிலும் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளிலும்

ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டனர் : காலி குடத்துடன் திரும்பிய ஜெயா !

சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்வர்

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நாவில் வாக்கெடுப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக ஐ.நாவில் வாக்கெடுப்பு நடந்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத்தின் முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. இருப்பினும் இந் நாடு ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது,

வியாழன், நவம்பர் 29, 2012

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை வெற்றி !!!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச்

ஃபேஸ்புக்வாசிகளை அலறவைக்கும் ஐ.டி.ஆக்ட் 66 (A) - துஷ்பிரயோகத்தை தடுக்க மத்திய அரசு அறிவிக்கை

டெல்லி : ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு சிறைக் கம்பி எண்ணக் கூடியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 (A) ஐ நடைமுறைப்படுத்த சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.ஐ.டி. ஆக்ட் 66 (A)- இது ஃபேஸ்புக் ,

காவிரி பிரச்சனை: பெங்களூரிலிருந்து ஜெயலலிதா வெறுங் குடத்துடன் தான் திரும்புவார்?

சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று பெங்களூர் செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெறும் கையோடு தான் திரும்புவாரா என்று தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம் !

லண்டன்:எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை சீர்குலைக்க முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவும், இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸிபி லிவ்னியும் ரகசியமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் எடிட்டர்

டமாஸ்கஸில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 54 பேர் பலி !

டமாஸ்கஸ்:சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் தென்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் 54 பேர் பலியாகியுள்ளனர். 83 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்களும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ள காட்சியை சிரியா ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன. சிரியாவின் ஜரமனா மாவட்டத்தில்

மதுரையில் துப்பாக்கியுடன் பிடிபட்டவரிடம் விசாரணை

மதுரையில் துப்பாக்கியுடன் பிடிபட்ட ஒருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மதுரை பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் பிடிபட்டார். பெருங்குடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே பிடிபட்ட அவரிடம் போலீஸார் சோதனை செய்ததில் அவரிடம் ஏர் கன் ஒன்றும், வேல்கம்பு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது. அவரை விசாரித்த போலீஸார் அவர் பெயர் துரைப்பாண்டி

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அப்சல் குருவுக்குத் தூக்கு?

டெல்லி: குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அப்சல் குருவை தூக்கிலிடலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.கசாப் தூக்கிலிடப்பட்ட பின்னர் டிவிட்டரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த கருத்தில், அப்சல் குரு என்னாச்சு என்று கேட்டிருந்தார். இதனால் இந்த விவகாரத்தை சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் பிரசார கருவியாக அவர் பயன்படுத்தலாம்

குஜராத் தேர்தல்: போலி என்கவுன்ட்டர் வழக்கு 'புகழ்' அமித் ஷாவுக்கு வாய்ப்பு தந்த மோடி.

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெளியிட்டுள்ள 3-வது வேட்பாளர் பட்டியலில் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது .குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 13, 17  தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 3வது வேட்பாளர் பட்டியல் நேற்று

ஆஸிஃப் இப்ராஹீம்: இந்தியாவின் 125 வருடகால வரலாற்றில் உளவுத்துறையின் தலைவராக முதல் முஸ்லிம் !

புதுடெல்லி:இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் பதவி யேற்கும்போது திருத்தப்படுவது இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறாகும். பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்தே தொடரும் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த உளவுத்துறையான ஐ.பியின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். நான்கு சீனியர் அதிகாரிகளையும் கடந்து

தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?.. திருமாவளவன் வேதனை !

ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதியச் சக்திகளை ஒருங்கிணைப்பதும் போன்ற நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவராலும் அனுமதிக்க முடியாது. மேலும், தலித்துகளுக்கு எதிராக தலித்

ஸ்வேதா மேனன் மீது மனித உரிமைக் கமிஷனிலும் புகார் !

ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தி உள்ளார். இச்செயல் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அவருடைய குழந்தைக்கான மனித உரிமையை மீறியுள்ளார். எனவே,

ஸ்பீக்கரை அலற வைத்ததால் ஏற்பட்ட விபரீதம் : கறுப்பின வாலிபரை சரமாரியாக சுட்டு கொன்ற அமெரிக்க தொழிலதிபர் கைது !

பாட்டு சத்தத்தை குறைக்கும்படி கூறியபோது ஏற்பட்ட தகராறில் கறுப்பின வாலிபரை சுட்டு கொன்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஜாக்சன்வில் நகருக்கு, மைக்கேல் டன் (45) என்ற தொழிலதிபர் ஷாப்பிங் செய்ய வந்திருந்தார். ஒரு கடையில் (எரிபொருள் நிரப்பும் சுப்பர் மார்க்கட்) மனைவியுடன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தபோது, காதை கிழிக்கும் அளவுக்கு பாட்டு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை பார்த்தபோது, கார் ஸ்டீரியோவில் சத்தமாக பாட்டு

முதன்முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசப் முர்ரே மரணம் !

வாஷிங்டன்: உலகில் முதன்முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஜோசப் முர்ரே காலமானார். அவருக்கு வயது 93. அமெரிக்காவின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் ஜோசப் முர்ரே. அவர் கடந்த 1954ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதன் மூலம் உலகிலேயே

அன்னிய முதலீடு: பாஜகவுக்கு கருணாநிதி வைத்த பதில் ஆப்பு !

சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் மிகப் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது திமுக. ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திட்டத்தை திமுக எதிர்த்தே வந்தது, இப்போதும் எதிர்க்கிறது. காரணம், ஓட்டுக்கள், குறிப்பாக வர்த்தக சமுதாயமான நாடார் சமூகத்தினரின் வாக்குகள். இந்தத் திட்டத்தை தமிழக வர்த்தக சங்கங்கள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் திமுகவும் இதை எதிர்க்க வேண்டிய நிலைக்குத்

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் திரைப்படம்: ஏழு பேருக்கு மரண தண்டனை விதிப்பு...

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 

‘துப்பாக்கி’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி !

சென்னை:இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க  நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுத் தொடர்பாக தமிழக அரசு

புதன், நவம்பர் 28, 2012

’சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியில் கணவன் சுட்டுக் கொலை! அச்சத்தில் மனைவி !

மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தங்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பிருப்பதால் தான் கொல்லப்பட கூடும் என முன் கூட்டியே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய இளம் கணவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கி வந்த ’சத்யமேவ்

தொழிலதிபரை மிரட்டி 100 கோடி கேட்ட Z டி வி நிருபர்கள் இருவர் கைது !

பிரபல தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் கேட்ட குற்றச்சாட்டு தொடர்பாக Z- தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் சுதீர் சவுத்ரி, சமீர் அலுவாலியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரபல தொழிலதிபரும், எம்.பி.யுமான நவீன் ஜின்டால், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் ஜின்டால் நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், இது

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா உதவியுடன் செயற்கைக்கோளை ஏவிய இலங்கை !

கொழும்பு: இந்தியாவின் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சுப்ரீம்சாட்-1 என்ற செயற்கைக் கோளை ஏவியுள்ளது இலங்கை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழப் போரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி்ன்னர் இந்தியாவை படு மோசமாக

ஜெ. குறித்து அவதூறாக பேசியதாக மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ கைது !

சேலம்: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதுறாகப் பேசியதாகக் கூறி தேமுதிக மேட்டூர் தொகுதி எம்எல்ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் நேற்று முன்தினம் தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சேலம் வடக்கு தேமுதிக எம்.எல்.ஏ அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ், மேட்டூர் எம்.எல்.ஏ

கருணாநிதி ஒரு கைநாட்டு: சு.சாமி குசும்பு !

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி ஒரு சினிமாக்காரர், படிக்காதவர் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவது குறித்து திமுக தலைவர் டிஆர் பாலு நோட்டீஸ் கொடுத்தார். அதில், 2ஜி ஊழல் வழக்கில் சிஏஜியின் அறிக்கை கால

குழந்தைகளை கொலைச் செய்யும் இஸ்ரேல்: மெளனம் சாதிக்கும் மேற்கத்தியர்கள் !

மேற்குகரை:எட்டு நாட்களாக நீண்ட காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மழலையர் உள்பட ஏராளமான குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட பிறகும் மேற்கத்திய நாடுகள் மெளனம் சாதிப்பதாக ஃபலஸ்தீனில்  மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஃபலஸ்தீனில் உள்ள குழந்தைகளை

கூடங்குளம் அணு கழிவுகளை யார் தலையில் கொட்டுவது !!!



 கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் அணு உலையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர். 
மேலும், அணுக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படும்? என்பதை விளக்குமாறும் உத்தரவிட்டனர். இதற்குப் பதில் அளித்த இந்திய அணு சக்தி கார்ப்பரேஷன் கர்நாடகா மாநில கோலார் தங்க வயலில் ஒரு

எகிப்து:நீதிபதிகளின் சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுகிறது !

கெய்ரோ :தனது அதிகார வரம்பை அதிகரித்தது தொடர்பாக நாட்டில் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் எகிப்து அதிபர் முர்ஸி நடத்திய முயற்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. நாட்டின் உயர் நீதிபதிகளுடன் நேற்று முன் தினம் முர்ஸி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக இருந்தது என்று அவரது செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியுள்ளார். முர்ஸிக்கு எதிராக நாடு

கோலாரில் கூடங்குளம் அணுக் கழிவைக் கொட்டும் திட்டமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் என்.பி.சி.ஐ.எல் பதில் !

டெல்லி: கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலார் தங்க வயலில் கொட்டும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் நரிமன், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு

யாசர் அராஃபத் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு...

பாலத்தீனத் தலைவர் யாசர் அராஃபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறியும் முகமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ரமல்லாவில் உள்ள கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது. அராப்ஃத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை இப்போது வல்லுநர்கள்

குஜராத் முதல் கட்ட தேர்தல்: 1218 வேட்பு மனுக்கள் ஏற்பு !

குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. 87 தொகுதிக்களுக்கான முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த 1218 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில

நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா !

வாஷிங்டன்: 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க 'புராஜெக்ட் ஏ119' என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை. இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள

முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகமிழைக்கும் செய்யத் ஷஹாபுத்தீன் – மோடி மன்னிப்புக் கோரினால் ஆதரிப்பாராம் !

புதுடெல்லி:கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கூட விட்டு வைக்காமல் வயிற்றைக் கிழித்து தீயிலிட்டு பொசுக்கிய சங்க்பரிவார பயங்கரவாதம் குஜராத்தில் கோர தாண்டவமாடிய நிகழ்வை முஸ்லிம்கள் எக்காலத்திலும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய வரலாறு காணாத இக்கொடிய இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவர்தாம் இந்திய தண்டனைச்

முர்ஸி ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் மோதல்: ஒருவர் பலி!

கெய்ரோ:எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டாமன் ஹவ்ரில் நைல் டெல்டாவில் உள்ள இஃவான் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியபோது இரு பிரிவினரும்

செவ்வாய், நவம்பர் 27, 2012

அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம்...ஆனால் ஆதரிக்கிறோம்: கருணாநிதி

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்தாலும்,இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாத்தௌடன் கூடிய வாக்கெடுப்பு நடைபெற்று ஆட்சி கவிழ்வதையும், அதனால் மதவாத

மறுபடியும் கத்காரிக்கு லெட்டர் எழுதுவேன்.. இன்னும் நடவடிக்கை எடுங்க...: கர்ஜிக்கும் ராம்ஜெத்மலானி...

டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு எதிரான தமது கலகக் குரல் ஓயப்போவதில்லை என்று கர்ஜித்திருக்கிறார் மூத்த பாஜக தலைவரும் எம்.பியுமான ராம்ஜெத்மலானி. ஊழல் புகாரில் சிக்கிய நிதின் கத்காரி பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராம்ஜெத்மலானி குரல் கொடுத்து

ஆண்கள் டிஷ்யூ பேப்பரா? நடிகை மீது அவதூறு வழக்கு !

தமிழக நடிகை சோனா என்பவர் ஆண்களை  துடைத்தெறியும் தாள் (டிஷ்யூ பேப்பர்) என்று பேட்டியில் சொன்னதற்கு எதிராக அவர்மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்த நடிகை சோனா ஆண்களை டிஷ்யூ பேப்பர் போல உபயோகிப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக எழும்பூர் 13வது பெருநகர நீதிமன்றத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனுவில் "சோனாவின் இந்த பேட்டி சுயமரியாதையுள்ள நமது

பா.ஜ.கவிலிருந்து ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட் !

புதுடெல்லி:சி.பி.ஐ புதிய இயக்குநர் நியமன விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை பா.ஜ.க சஸ்பெண்ட் செய்துள்ளது.கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன்  கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் மேலும் கூறியது: “சிபிஐ-யின் புதிய இயக்குநராக

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் : மும்பை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு !

மறைந்த சிவசேனா பயங்கரவாத அமைப்பின்  தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து

திங்கள், நவம்பர் 26, 2012

உலகத்தையே வியக்க வைக்கும் சீனா !

உலகின் மிக பெரிய கட்டிடத்தை சைனா கட்ட உள்ளது. அந்த கட்டிடதிற்கு ஸ்கை சிட்டி (SKY CITY ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தற்போதைய உலகின் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய்யை விட 10 மீட்டர் அதிகமாக இருக்கும். இந்த கட்டிடம் சைனாவின் ஹுனான் பிரதேசத்தின் கட்டப்பட இருக்கிறது.  இதில் உலக அதிசயம் ஒன்று நடக்க இருக்கிறது, இந்த கட்டிடம் வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. ஜனவரி 2013 இல் தொடங்கி மார்ச் 2013 இந்த கட்டிடம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்து உரை !

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும் 

அஸ்ஸாம் அகதிகளுக்கு தொடரும் ரிஹாபின் சேவை !

புதுடெல்லி:ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், அஸ்ஸாம் அகதிகள் முகாம்களில் நிவாரண உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. சிராங், துப்ரி, கொக்ராஜர், பேர்பட்டா மாவட்டங்களில் உள்ள 58 அகதிகள் முகாம்களில் உள்ள 56,644 பேருக்கு 22,59,701 ரூபாய் மதிப்புடைய நிவாரண உதவிகளை ரிஹாப் வழங்கியது. இந்த உதவிகளை வழங்கும் பணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான்

திமுக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் காலமானார் !

சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் (வயது 66) சென்னையில் நேற்று காலமானார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சமயநல்லூர் செல்வராஜ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று