வியாழன், நவம்பர் 29, 2012

ஸ்வேதா மேனன் மீது மனித உரிமைக் கமிஷனிலும் புகார் !

ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தி உள்ளார். இச்செயல் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அவருடைய குழந்தைக்கான மனித உரிமையை மீறியுள்ளார். எனவே,
பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்றொரு புகார் மனித உரிமைக் கமிஷனுக்கு போயிருக்கிறது.! மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்வேதா மேனன்.  மலையாளத்தில் பிரபல டைரக்டரான பிளேஸ்சி இயக்கிய ‘களிமண்’ என்ற படத்தில் ஸ்வேதா மேனன் கர்ப்பிணியாக நடிக்கிறார்.

அந்த படத்துக்காக அவருடைய பிரசவ உண்மை காட்சிகளையும் பிளேஸ்சி படம் பிடித்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த படம் அடுத்தாண்டு வெளி வரவுள்ளது. பிரசவ காட்சியை படம் பிடித்ததை எதிர்த்து எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஸ்வேதா மேனன் மீது மனித உரிமை ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நொய்யாற்றின்கரையை சேர்ந்த சத்யசீலன் என்பவர் கேரள மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில், ‘ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தி உள்ளார். இச்செயல் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அவருடைய குழந்தைக்கான மனித உரிமையை மீறியுள்ளார். எனவே, பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த படத்தை வெளியிட கேரள திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு தலைமை செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக