ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் கட்டளை தளபதியான அஹமத் ஜபாரி இஸ்ரேல் விமானத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந் நிலையில் அந்த தாக்குதலுக்கான உளவு உதவியினை கட்டார் மன்னர் மூலமே இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக தகவல்
வெளியாகி உள்ளது. அண்மையில் காஸாவுக்கு விஜயம் செய்திருந்த கட்டார் மன்னரான ஷேய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி காசா தலைவர்களுக்கு வழங்கியதாக கூறப்படும் கடிகாரம் மற்றும் குமிழ் முனைப் பேனை ஆகியவற்றில் நுண்ணிய இலத்திரனியல் சமிக்ஞை சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதன் மூலமே இஸ்ரேல் ஜபாரியையும் ஹமாசின் ரகசிய ஆயுதக்கிடங்குகளையும் இலக்குவைத்ததாகவும் பார்ஸ் சேவை தெரிவித்ததாக பிரஸ் ரி.வி தெரிவித்துள்ளது.
இதேவேளை லிபியாவில் கடாபிக்கு எதிராக அமெரிக்கா ஆயுத விநியோகம் செய்ததும் ஈரானில் எதிர் கட்சி ஆயுதக் குழுக்களுக்கு ஆய்தம் விநியோகம் செய்வதும் கட்டார் மூலமே எனவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக