புதுடெல்லி:கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கூட விட்டு வைக்காமல் வயிற்றைக் கிழித்து தீயிலிட்டு பொசுக்கிய சங்க்பரிவார பயங்கரவாதம் குஜராத்தில் கோர தாண்டவமாடிய நிகழ்வை முஸ்லிம்கள் எக்காலத்திலும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய வரலாறு காணாத இக்கொடிய இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவர்தாம் இந்திய தண்டனைச்
சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை பெற மிகப்பொருத்தமான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி. சமுதாய தலைவர்கள் என்ற பெயரால் வைட் காலர் வேடமிட்டு திரியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்கள் சிலர் அவ்வப்போது மோடிக்கு துதி பாடுவது வழக்கம். அவ்வகையில் 10 முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு என கூறப்படும் அமைப்பான ‘முஸ்லிம்
ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’ டின் சேர்மனாக இருக்கும் செய்யத் ஷஹாபுத்தீன், குஜராத் இனப்படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கோரினால் தேர்தலில் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷஹாபுத்தீன் 10 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’டின் சேர்மன் என்ற பெயரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இந்த கூட்டமைப்பில் உள்ள முக்கிய அமைப்புகள் ஷஹாபுத்தீனின் தன்னிச்சையான கடிதத்திற்கும் அவரது கருத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகையதொரு விவகாரம் குறித்து
தங்களிடம் ஷஹாபுத்தீன் விவாதிக்கவில்லை என்றும், அவருடைய நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என்றும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி கூறியுள்ளார்.
தங்களிடம் ஷஹாபுத்தீன் விவாதிக்கவில்லை என்றும், அவருடைய நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என்றும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி கூறியுள்ளார்.
மோடி மன்னிப்புக் கோருவதல்ல, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் பொலிட்டிக்கல்
செயலாளர் முஹம்மது அஹ்மத் கூறியுள்ளார். ஷஹாபுத்தீனின் தலைமையிலான இந்த கூட்டமைப்பு தற்போது இயங்கவில்லை என்றும், அவர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதனை ஒப்புக்கொள்ளவியலாது எனவும் மில்லி கவுன்சில் தலைவர் மன்சூர் ஆலம் கூறியுள்ளார்.

இதனிடையே, தான் எழுதிய கடிதத்திற்கும் முஸ்லிம் கூட்டமைப்பிற்கும் தொடர்பில்லை என்று ஷஹாபுத்தீன் கூறியுள்ளார். கமிட்டி ஃபார் முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்டின்’ லெட்டர் பேடை தனது அலுவலகத்தில் பணியாற்றுவோர் தவறுதலாக உபயோகித்தனர் என்று ஷஹாபுத்தீன் கூறியுள்ளார். நரேந்திர மோடியை மன்னிக்கவும், அவருக்கு வாக்களிக்கவும் ஒருபோதும் குஜராத் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் முன்னாள் எம்.பியும், மஜ்லிஸே முஷாவராத்தின் முன்னாள் தலைவருமான செய்யத் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக