மேற்குகரை:எட்டு நாட்களாக நீண்ட காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மழலையர் உள்பட ஏராளமான குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட பிறகும் மேற்கத்திய நாடுகள் மெளனம் சாதிப்பதாக ஃபலஸ்தீனில் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஃபலஸ்தீனில் உள்ள குழந்தைகளை
கொலைச் செய்வதற்கே இஸ்ரேல் ராணுவத்தில் தனிப்பிரிவு ஒன்று செயல்படுவதாக, ஜபலியா ஃபலஸ்தீன் அகதி முகாமை மையமாக கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பான அல் மீஸானின் தலைவர் ஸமீர் ஷுக்கூத் கூறுகிறார். இஸ்ரேலின் விமானத்தாக்குதல் அதிகமாக குழந்தைகளை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. இது முதல் நிகழ்வு அல்ல. முந்தைய காலங்களிலும் குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போர்க் குற்றத்திற்காக இஸ்ரேல் தலைவர்களை விசாரணைச் செய்யவேண்டும் என்று ஷுக்கூத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக