ஞாயிறு, நவம்பர் 25, 2012

இலங்கை சர்மிளாவும்.... தமிழக சல்மாவும்.. மார்க்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காத இவர்களின் எழுத்தை பாருங்கள் !

இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பெருமையையும் கொடுக்கிறது.... இது இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழும் பெண்களுக்கு தெரியும்... இதை உணர்ந்ததால்தான் இஸ்லாத்திற்கு வெளியே இருந்த இஸ்லாதை அறியாத கமலாதாஸ் போன்ற எத்தனையோ பெண்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று விரும்பி இஸ்லாத்தில் இணைகிறார்கள். ஆனால் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து மேல் நாட்டு மோகத்தில் எப்படியும் மனம் போன போக்கில் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பெயர் தாங்கிகள் தங்களுக்கும் தாங்கள்
சார்ந்துள்ள சமூகத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய கேடுகெட்ட கருத்துக்களை பெண்ணியம் பெண் உரிமை என்ற பெயரில் உளரி வருவதை காலம் காலமாக பார்த்து வருகிறோம்.
அந்த லிஸ்டில் புதிதாக தன்னை இணைத்துகொண்டுள்ளார் இலங்கை பெண் கவிஞர் சர்மிளா... இவர் உதிர்த்தமுத்துக்கள் ''பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும். அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவதுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்''
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தென்பகுதி மாகாண சபையின் ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்ற நிலையில் சமூக ஆய்வாளரான சர்மிளா செய்யத்தும் இதனை தெரிவித்திருக்கிறார். 
இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது. அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு கவிஞர் இவர் எழுதி தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் '' சிறகு முளைத்த பெண் '' என்ற கவிதைப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது..
இதே போல் தமிழகத்திலும் ஒரு பெண் கவிஞர் உள்ளார் அவர் பெயர் சல்மா இவர் கூறுவதை கேளுங்கள்...
''எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை''.
''என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான்.
“நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா” என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான்.இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது''.
இவர் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை- முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாத ஆண்களுடன் ஓடிப்போகின்ற சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறது.இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பற்றிய அன்றைய பெசன்ட்நகர் நிகழ்வில், ஏற்புரை ஆற்றிய சல்மா ''எனது சமூகத்தைக் கொச்சைப் படுத்துவதோ, என் சமூக மக்களைப் புண் படுத்துவதோ எனது நோக்கமல்ல..நான் கண்டவற்றை, கேட்டவற்றை,அனுபவித்தவற்றை அப்படியே எழுதினேன்'' என்றார்.
இப்படி தான் சார்ந்துள்ள சமுதாயத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாது மிகவும் ஆபாசமாகவும் எழுதியுள்ளார்.... 
அச்சில் ஏற்ற முடியாத அருவருப்பான இவரின் கவிதைகள் " கவிஞர் சல்மா " என்று கூகுளில் தேடும்போது கிடைக்கிறது. 
இந்த வியாதிகள் தொடரும் ஏனென்றால் இவ்வாறு தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் தன்னை தனித்துக்காட்டி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற எழுத்து விபச்சாரிகளின் எண்ணம்... இவர்களை இனம் கண்டு புறக்கணிப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக