வெள்ளி, நவம்பர் 16, 2012

பால்தாக்கரே கவலைக்கிடம்:மெல்ல, மெல்ல உணர்வற்ற நிலைக்கு செல்கிறார் !

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேக்கு கடந்த ஜூலை மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு பந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் பால் தாக்கரேக்கு கடந்த வாரம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 86 வயதாகும் அவர் மூச்சுவிட கடுமையாக
திணறினார். இதையடுத்து லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் அவரது வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவருக்கு மஞ்சள் காமலை தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அவர் உடல்நிலை கடந்த சில தினங்களாக கவலைக்கிடமாக உள்ளது. நேற்றிரவு அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. கடந்த 2 நாட்களாக அவருக்கு உணர்வும் சற்று மங்கியது. பால்தாக்கரே மெல்ல, மெல்ல உணர்வற்ற நிலைக்கு செல்வதால் சிவசேனா மூத்த தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக