பெங்களூர்:பா.ஜ.கவில் எதிர்ப்பாளர்களின் தலைவரும், முன்னாள் கர்நாடகா மாநில முதல்வருமான எடியூரப்பா, கட்சி மற்றும் சட்டப்பேரவையில் இருந்து இன்று ராஜினாமாச் செய்கிறார். நாற்பது ஆண்டுகளாக கட்சிக்கும், அவருக்கும் இடையே தொடரும் உறவு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆதரவாளர்களுடன் விதான சபாவிற்கு வந்து தனது
சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யப் போவதாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கட்சியில் நீடிக்கவேண்டும் என்ற பா.ஜ.க மேலிடத் தலைவர்களின் கோரிக்கையை எடியூரப்பா நிராகரித்துவிட்டார். தனது புதிய கட்சியான கர்நாடகா ஜனதா கட்சி(கே.ஜே.பி) டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரிடம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.க அரசு காலாவதியை பூர்த்திச் செய்யவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், தனது ஆதரவாளர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்கவே அவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியதாக எடியூரப்பா தெரிவித்தார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்கவே அவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியதாக எடியூரப்பா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக