வெள்ளி, நவம்பர் 30, 2012

தப்லீக் ஜமாத்தினர் மீது போலீஸ் அடக்குமுறை : மில்லி கவுன்சில் அவசரக்கூட்டம்!

ஜமாத்தினரை, ஓடும் ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கி "கையில் விலங்கு மாட்டி" இழுத்துச்சென்றது குறித்து, ஆலோசிக்க "ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின்" அவசரக்கூட்டம் டெல்லியில் நேற்று (29/11) மாலை நடைபெற்றது.

டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த தப்லீக் ஜமாத்தினரை "மதுரா" ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கியது, "ஹத்தன்" காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து - தண்ணீர் தொட்டியில் அமுக்கி சித்திரவதை செய்தது, உள்ளிட்ட கொடுமைகள் குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து, அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து, ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் பொதுச்செயலாளர், டாக்டர் மன்சூர் ஆலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அட்வகேட் முஷ்தாக் அஹ்மத், பொருளாளர் முஷர்ரப் ஹுசைன், டெல்லி மாநில மில்லி கவுன்சில் தலைவரும் மாநில ஹஜ் கமிட்டி தலைவருமான டாக்டர் பர்வேஸ் மியான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக