செவ்வாய், நவம்பர் 27, 2012

மறுபடியும் கத்காரிக்கு லெட்டர் எழுதுவேன்.. இன்னும் நடவடிக்கை எடுங்க...: கர்ஜிக்கும் ராம்ஜெத்மலானி...

டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு எதிரான தமது கலகக் குரல் ஓயப்போவதில்லை என்று கர்ஜித்திருக்கிறார் மூத்த பாஜக தலைவரும் எம்.பியுமான ராம்ஜெத்மலானி. ஊழல் புகாரில் சிக்கிய நிதின் கத்காரி பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராம்ஜெத்மலானி குரல் கொடுத்து
வந்தார். அவருடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரும் கை கோர்த்திருக்கின்றனர். இந்நிலையில் சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் பாஜக விமர்சனம் செய்தது தவறு.. காங்கிரஸின் நிலைப்பாடு சரி என்றும் ராம்ஜெத்மலானி கூறினார். இதனால் ராம்ஜெத்மலானியை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது.

ஆனாலும் ராம்ஜெத்மலானி ஓயப் போவதில்லை என்று கூறிவருகிறார். கத்காரிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்ப இருக்கிறேன்... அப்பொழுது இன்னும் நடவடிக்கை எடுங்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் அவர்.
சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா மீது நடவடிக்கை?
இதனிடையே ராம்ஜெத்மலானியுடன் கை கோர்த்திருக்கும் யஷ்வந்த் சின்ஹா, சதருகன் சின்ஹா ஆகியோர் மீதும் பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக