வெள்ளி, நவம்பர் 23, 2012

உலக வரைபடத்தில் இருக்கும் குட்டித்தீவை காணவில்லை அதிர்ச்சி தகவல் !

உலக வரைபடங்களிலும், கடல் பாதை வரைபடங்களிலும் பல காலமாக காண்பிக்கப்பட்டுவரும் தென் பசிபிக் சமுத்திரத்தின் சிறு தீவு ஒன்று நிஜத்தில் இல்லை என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சேண்டி ஐலண்ட் என்ற பெயரில் கூகுள் மேப்ஸ் வரைபட சேவையில் காண்பிக்கப்படுகின்ற இந்த சின்னத்
தீவு, ஆஸ்திரேலியாவுக்கும் பிரான்சினால்
ஆளப்படுகின்ற நியூ கேளடோனியா என்ற தீவுக்கூட்டத்துக்கும் இடையில் அமைந்திருக்கும். ஆனால் அந்த கடல் பகுதிக்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சென்று தேடிப்பார்த்தபோது அங்கே தீவு எதுவும் இல்லை கிழே பவழப் பாறைகளுடன் நீலக்கடலே இருந்துள்ளது.
"தீவு தெரியும் என்று எதிர்பார்த்துப்போனால், ஆயிரத்து நானூறு மீட்டர் ஆழமான சமுத்திரமே அந்த இடத்தில் இருந்தது" என்று கப்பலில் சென்று பார்த்த விஞ்ஞானி மரியா செடன் என்பவர் கூறினார்.
இப்படி ஒரு தீவு இருப்பதாக கடந்த பத்து வருடங்களாகவே வரைபடங்களில் குறிக்கப்பட்டுவந்துள்ளது.

இந்த தீவு நிஜமாக இருந்திருந்தால் அது பிரான்சால் ஆளப்படுகின்ற நியூ கேளடோனியாகடல்பரப்பில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸின் உத்தியோகபூர்வ வரைபடங்களில் இந்த தீவு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற வரைபடங்களில் இந்தத் தீவு தவறுதலாக இடம்பெற்றுவந்துள்ளது.
யாரும் கண்டுபிடிக்காத புதிய இடங்களைக் கண்டறிய வேண்டும் என்பதுதான் கடலோடிகளின் அவாவாக இருக்கும், ஆனால் இருப்பதாக கருதப்பட்டுவந்த ஒரு இடம் இல்லை என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இப்போது கண்டறிய நேர்ந்திருப்பது ஆச்சரியம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக