வெள்ளி, நவம்பர் 30, 2012

ஃபேஸ்புக் பெண் கைது: மகாராஷ்ட்ர அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பால்தாக்கரே குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக 2 பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற மறுதினம்,   மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது. இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில், “தாக்கரே
போன்றவர்கள்   தினமும்  பிறக்கிறார்கள்...இறக்கிறார்கள்...அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று  மகராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பல்கர் என்ற இடத்தை சேர்ந்த ஷகீனும்,அதற்கு 'லைக்'  போட்ட அவரது தோழி ரேணுவும் கைது   செய்யப்பட்டனர்.



இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள்    விடுவிக்கப்பட்டனர்.மேலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அப்பெண்கள்  மீதான வழக்கும் வாபஸ்பெறப்பட்டது. 



அத்துடன் அப்பெண்களை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதியை மும்பை உயர்  நீதிமன்றம் இடமாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில்,கைது நடவடிக்கையை  செயல்படுத்திய காவல்துறை எஸ்.பி. மற்றும் ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 



இந்த விவகாரம் குறித்து கவலை வெளியிட்டிருந்த உச்ச நீதிமன்றம்,இது தொடர்பாக ஏன்  யாரும் தங்களை அணுகவில்லை என்று கேட்டிருந்தது. 



இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஸ்ரேயா சிங்கால் என்ற  மாணவி,இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல்  செய்தார்.அதில் இச்சம்பவத்தை குறிப்பிட்டு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 (ஏ)  பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். 



இம்மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மேற்கூறிய  பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்  மகாராஷ்ட்ர அரசுக்கு உத்தரவிட்டது. 



மேலும் தகவல் தொழில் நுட்ப சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசு மற்றும்  இதேபோன்ற கைது நடவடிக்கைகள் அரங்கேறிய தமிழ்நாடு,மேற்கு வங்கம், டெல்லி  மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும்  உத்தரவிட்டது.



அதே சமயம் இந்த மனு தொடர்பான இன்றைய விசாரணையின்போது, ஃபேஸ்புக்கில்  கருத்து தெரிவித்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றும்,  அதே சமயம் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66 (ஏ) பிரிவு அவசியம் தேவையாக  உள்ளது என்றும்,அதனை நீக்க முடியாது என்றும் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக