பிரபல தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் கேட்ட குற்றச்சாட்டு தொடர்பாக Z- தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் சுதீர் சவுத்ரி, சமீர் அலுவாலியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரபல தொழிலதிபரும், எம்.பி.யுமான நவீன் ஜின்டால், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் ஜின்டால் நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், இது
தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இந்த உண்மையை தங்கள் தொலைக்காட்சி சேனலில ஒளிப்பரப்பாமல் இருக்க ரூ.100 கோடியை சமரச தொகையாக தர வேண்டும என்றும், ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் 2 பேர் தன்னை மிரட்டுவதாகவும், அந்த புகார் மனுவில் ஜின்டால் கூறியிருந்தார்.
இதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் அளித்திருந்தார். இந்த வீடியோ பதிவுகள், சில தனியார் தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகின. இந்த புகார் அளிக்கப்பட்ட 45 நாட்களுக்கு பிறகு, மேற்கண்ட குற்றச்சாட்டு தொடர்பாக அந்த தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் சுதீர் சவுத்ரி, சமீர் அலுவாலியா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக