தமிழக நடிகை சோனா என்பவர் ஆண்களை துடைத்தெறியும் தாள் (டிஷ்யூ பேப்பர்) என்று பேட்டியில் சொன்னதற்கு எதிராக அவர்மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்த நடிகை சோனா ஆண்களை டிஷ்யூ பேப்பர் போல உபயோகிப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக எழும்பூர் 13வது பெருநகர நீதிமன்றத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனுவில் "சோனாவின் இந்த பேட்டி சுயமரியாதையுள்ள நமது
சமூகத்தைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண்களின் மரியாதையை கெடுக்கும் வகையில் உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மத்தியில் ஆண்கள் மீது உள்ள மதிப்பை கெடுக்கும் வகையில் இந்த பேட்டி உள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் அவர் ஆண்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 504, 505 ( அவதூறு பரப்பும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்ற நடுவர் சிவகுமார் விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக