புதன், நவம்பர் 28, 2012

கோலாரில் கூடங்குளம் அணுக் கழிவைக் கொட்டும் திட்டமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் என்.பி.சி.ஐ.எல் பதில் !

டெல்லி: கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலார் தங்க வயலில் கொட்டும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் நரிமன், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு
மூடப்பட்டுவிட்டன. கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முடிவு செய்திருக்கிறது என்றார். கோலார் தங்கவயலில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமிக்க கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கோலாரில் பந்த் நடந்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலாரில் கொட்டும் திட்டமே இல்லை என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அணு சக்தி கழகம் அறிவித்தது.
இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அணு சக்தி கழகம் துணைப் பிரமாணப் பத்திரம் ஒன்றை சமர்பித்தது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்ட கருத்துகளைச் சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுவிட்டன. இந்த விவகாரத்தின் தீவிரத்தையும் மக்கள் நலனையும் மனதில் கொண்டு, விளக்கம் தருகிறோம்.
அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்கான இடமாக கோலார் தங்க வயலின் எந்தச் சுரங்கமும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக