எலும்புக் கூடுகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஸ்வீடனைச் சேர்ந்த 37 வயது பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு உடல்களின் 100 எலும்புகள் கிடைத்துள்ளன.மேலும் எலும்புக் கூடுகளை கட்டிக் கொண்டும், மண்டை ஓடுகளுக்கு அவர் முத்தம் கொடுப்பதும் போன்ற படங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.ஸ்வீடனின் தென் மேற்கில் உள்ள கோதன்பெர்க் நகரைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இன்டர்நெட் forum-ல் எலும்புக் கூடுகளுடன் உறவு கொள்வது குறித்து மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். எனக்கு வாய்க்கும் கணவன், உயிரோடோ அல்லது பிணமாகவோ இருந்தாலும், இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த எலும்புகளுடன் இருக்கும் போது இன்பம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரது வீட்டில் 6 மண்டை ஓடுகள், ஒரு முதுகெலும்பு உள்ளிட்ட 100 மனித உடல் எலும்புகள் கிடைத்துள்ளன.
மேலும் ஸ்வீடனின் ஒரு பிணவறையைத் திறக்கும் access code-கள் அடங்கிய சிடியும் இவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்வீடனின் உப்சலாவில் வசிக்கும் ஒரு நபருக்கு 3 மண்டை ஓடுகளையும், ஒரு முதுகெலும்பையும் விற்றுள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் எலும்புக் கூடுகளுடன் தான்உறவு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று மறுத்துள்ளார். வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டதால் இந்த எலும்புகளை சேகரித்ததாகக் கூறியுள்ளார்.
இவர் மீது 'இறந்தவர்களின் அமைதியைக் கெடுத்ததாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதமே இவர் கைது செய்யப்பட்டாலும் அது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இப்போது கோதன்பெர்க் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
கைப்பற்றப் பட்ட எலும்புகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக