வாஷிங்டன்:அரேபிய விரிகுடாவில் அமெரிக்காவின் ஆளில்லா (ட்ரோன்) விமானத்தின் மீது ஈரான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. சர்வதேச கடல் எல்லைக்கு வெளியே இம்மாதம் 1-ஆம் தேதி இத்தாக்குதல் நடந்துள்ளது. வழக்கமாக அமெரிக்காவின் எம்.க்யூ-1 என்ற ட்ரோன் சோதனையை முடித்து விட்டு பறந்து செல்லும் பொழுது ஈரான் போர்விமானங்கள் தாக்கின.இவ்வேளையில்
ஈரானின் எஸ்.யு-25 ப்ரோக்ஃபுட் போர் விமானங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை சுட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பெண்டகன் கூறியுள்ளது. அதே வேளையில் ட்ரோன் பாதுகாப்பாக தனது தளத்திற்கு வந்தடைந்துள்ளது. ட்ரோன் ஈரான் எல்லையை கடந்து செல்லவில்லை என்று பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.கடலோரத்தில் இருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவில் தான் ஈரானின் எல்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அடையாளம் தெரியாத விமானம் நாட்டின் எல்லையை அத்துமீறியதால் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறுகிறது. ஈரான் ராணுவம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பதை இச்சம்பவம் உணர்த்துவதாக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாலிதி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக