புதன், நவம்பர் 21, 2012

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்டனை நிறைவேற்றம் !

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டஅஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர்
கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக