வெள்ளி, நவம்பர் 30, 2012

சேலம், தர்மபுரி மாவட்டங்களை உலுக்கிய 'சூறாவளி' இரைச்சலுடனான நிலநடுக்கம் !

சேலம்: சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலி 3.3அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இன்று அதிகாலை 3.50 மணியவில் சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளிலும் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளிலும்
இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென வெடிவெடிப்பது போல, பேரிரைச்சலுடன் கேட்ட இந்த நடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்த அனைவரும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில இடங்களில் சாலைகளிலும் கூட விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கால்நடைகளும் கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடின.

மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதி கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

வழக்கமான நிலநடுக்கம் போல இல்லாமல் சூறாவளி காற்று வீசும்போது ஏற்படக் கூடிய இரைச்சலுடன் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதால் பெரும் பீதியில் ஆழ்ந்து போயுள்ளனர் அப்பகுதி மக்கள்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக