புதன், நவம்பர் 28, 2012

குஜராத் முதல் கட்ட தேர்தல்: 1218 வேட்பு மனுக்கள் ஏற்பு !

குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. 87 தொகுதிக்களுக்கான முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த 1218 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி, அசோக் மனேக் தெரிவித்துள்ளார். இன்று வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாள்.  எனவே, வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்றிரவு வெளியாகும் என தெரிகின்றது. இந்த முதல் கட்ட தேர்தலில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜீன் மோத்வாடியா, பா.ஜ.க. வேட்பாளரான சுரங்க அதிபர், பாபுபாய் பொக்கிரியாவுடன் மோதுகின்றார். 

மீன்வளத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, மாநில மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம் சோலாங்கியை பவ்நகர் தொகுதியில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சக்திசின் கோஹில் எதிர்கொள்கின்றார். 

குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரியும், புதிதாக தனிக்கட்சி தொடங்கியுள்ள கேசுபாய் பட்டேலை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர், கானுபாய் பலாலா போட்டியிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக