மும்பை:சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது, சிவசேனை மீதான பயம் காரணமாகவே முழு அடைப்பு என்றும், உண்மையான மரியாதைக்காக அல்ல என்றும் பேஸ்புக்கில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் பெண்கள்
இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு காரணமாக, இந்த வழக்கை நேற்று கைவிடுவதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்தது.
அதனிடையே, எம்.என்.எஸ் தலைவர் ராஜ்தாக்கரேயை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட 19 வயது சுனில் விஸ்வகர்மாவை போலீசார் விடுதலைச் செய்தனர். இவரது பெயரில் யாரோ ஒரு நபர் போலி அக்கவுண்டை உருவாக்கியதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக