இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.
இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.
தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.
அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.
ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.
சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோத்தபயா
பொறுப்பற்ற வீடியோக்களை வெளியிடும் சேனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் கொலைக்களம் வீடியோவை வெளியிட்ட சேனல் 4 கடந்த 27-ம் தேதி இலங்கையில் போர்க்குற்றம் என்ற வீடியோவை வெளியிட்டது. அதில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளை எல்லாம் சுட்டுத்தள்ளுமாறு ராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாகத் தெரிவித்திருந்தது.
இதைப் பார்த்து கடுப்பான கோத்தபயா ராஜபக்சே தான் அவ்வாறு கட்டளையிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இறுதி கட்டப்போரின் போது என்ன நடந்தது, இனி என்ன நடக்கப் போகிறது என்று ஷவேந்திர சில்வாவே சொல்வார் என்று கோத்தபயா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
போருக்கு முன்பு முல்லைத் தீவில் 3 ல்டசம் பேர் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. போருக்குப் பிறகு 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். விடுதலைப் புலிகள் பலர் கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதிகளாக இருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பத்தார் கடல் வழியாக தப்பிச் செல்கையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை இலங்கை அரசு இன்றளவும் பாதுகாத்து வருகிறது. பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசு நல்லபடியாக கவனித்துக் கொண்டது.
சரண் அடைந்த 11 ஆயிரம் தற்கொலைப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர் ஒருவரை படையினர் 2 லட்சம் மக்கள் மத்தியில் இருந்து காப்பாற்றியது முந்தைய வீடியோ காட்சிகளில் உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக