செவ்வாய், ஜூலை 26, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்பு- புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு...

JULY 26, மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.
புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர்.

ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா இயக்கங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதற்க்கு மும்பை மாநில புலனாய்வுத்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் நேசனல் புலனாய்வுதுறைக்கும் மும்பை புலனாய்வு துறைக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு வந்துள்ளது.


d973e17a-1c6c-4d91-8234-26f311de671f_S_secvpf இதற்கிடையே, ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.


0மேலும், ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை தீவிரமடைவதால் பா.ஜ.க சில அமைச்சர்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது: வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெடிக்குண்டு நிர்மாணித்தது, இனப்படுகொலை நடத்தியது குறித்த ஒன்பது ஆதாரங்கள் என் வசம் உள்ளன. பாப்ரி மஸ்ஜித் தொடர்பான இரு வழக்குகளை விரைவுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோரிக்கைதான் பா.ஜ.கவின் எங்கள் மீதான தாக்குதலின் மற்றொரு காரணமாகும்.
விசாரணையை அரசு வலுப்படுத்தும் வேளையில் ஏன் இத்தகைய விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன என்பதுக் குறித்து எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக