அமெரிக்காவில், "ஐசக்' சூறாவளியில் சிக்கி, உயிரிழந்த ஆயிரக்கணக்கான பெருச்சாளிகள், மிசிசிபி கடலோரப் பகுதிகளில் ஒதுங்கி உள்ளன. இதனால், அந்த பகுதி முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது.கடந்த ஆகஸ்ட் கடைசியில், அமெரிக்காவின் வடக்குப் பகுதியை, "ஐசக்' சூறாவளி ஆக்ரோஷமாக தாக்கியது. இதில், பல பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஹிஸ்பானியோலோவைச் சேர்ந்த, 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சூறாவளி தாக்கிய, லூசியானாவில் ஏராளமான சதுப்பு
நிலப்பகுதி உள்ளது. ஆயிரக்கணக்கான பெருச்சாளிகளின் வசிப்பிடமாக, இது திகழ்கிறது. சூறாவளியின் வேகத்தில் இப்பகுதியில் வெள்ளம் பாய்ந்து, ஏராளமான பெருச்சாளிகள் செத்தன.மேலும் பல ஆயிரம் பெருச்சாளிகள், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் தள்ளப்பட்டன.
சூறாவளியில், சிக்கி இறந்த இவற்றின் சடலங்கள், நேற்று முன்தினம், மிசிசிபி கடற்கரையில் ஒதுங்கத் துவங்கி உள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் பிரச்னையானது.
செத்த பெருச்சாளிகளை அகற்றும் பணியில், ஒப்பந்ததாரர்கள் பலர், ஈடுபட்டு, 16 ஆயிரம் பெருச்சாளிகளின் ஊறிய சடலங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை தவிர, பாம்பு, முயல், மான் போன்றவற்றின் சடலங்கள், கரையில் ஒதுங்கி வருவதாக, ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.மிசிசிபி கடற்கரைக்கு, பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காணக் கிடைக்காத காட்சியாக நினைத்து, சிலர் அவ்வப்போது இங்கு வந்து, செத்த எலிகளை அகற்றும் பணியை பார்த்துச் செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக