டெல்லி: மமதா பானர்ஜி எப்பவுமே இப்படித்தான். நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி முடிவை மாற்றுவது அவரது இயல்பு. எனவே மமதாவின் தற்போதைய முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாத தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை மமதா பானர்ஜி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது குறித்து லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், அவரது முடிவு எந்த ஆச்சரியமும்
கொடுக்கவில்லை. இது புதிதுமில்லை. அவர் எப்பவுமே இப்படித்தான். நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி தனது முடிவை மாற்றிக் கொண்டே இருப்பவர் அவர் என்றார் லாலு பிரசாத் யாதவ்.
சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளரும், முலாயம் சிங் யாதவின் தம்பியுமான ராம் கோபால் யாதவ் கூறுகையில், காங்கிரஸ் கட்சி ஏதோ தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பது போல நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. கூட்டணிக் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக