புதன், செப்டம்பர் 26, 2012

ட்ரோன் தாக்குதல்: விபரீத பின்விளைவுகளை உருவாக்குகிறது – அமெரிக்க அறிக்கை !

வாஷிங்டன்:சி.ஐ.ஏ தலைமையில் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானில் நடத்தி வரும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்கள் விபரீத பின்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவிகள் பலியாவதாகவும் அமெரிக்க கல்வியாளர்களின் அறிக்கை கூறுகிறது. ஸ்டாண்ட்ஃபோர்ட், நியூயார்க் பல்கலைக்கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வின்
அடிப்படையிலான அறிக்கையில் அமெரிக்க அரசை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மக்களை பீதியின் முனையில் நிறுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.இத்தாக்குதல்கள் அப்பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கோ, அன்றாட தேவைகளை நிறைவுச் செய்யவோ வெளியே செல்ல முடியாத விதமாக அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக  ‘லிவிங் அண்டர் ட்ரோன்’ என்ற ஆய்வறிக்கை குற்றம் சாட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக