புதன், செப்டம்பர் 26, 2012

நான்கு அணு ஆயுத ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்தது ஈரான் !

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று பெரும் போர்க்கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கக்கூடிய நான்கு ஏவுகணைகளை ஈரான் சோதித்துப் பார்த்துள்ளது.  பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திவரும் இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பரிசோதனைகளை ஈரான் நிகழ்த்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஐம்பதே விநாடிகளில் மிகப் பெரிய போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறம் படைத்தவை என்று
சொல்லப்படுகிறது.  தனது கடல் எல்லையிலுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில்  ஈரான் இந்த ஏவுகணை  சோதனைகளை நிகழ்த்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக