வியாழன், செப்டம்பர் 27, 2012

கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம் !

ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்து விட்டால் இனி கவலையில்லை. கையை நீட்டினாலே பணம் தரும் ஏடிஎம் விரைவில் வர இருக்கிறது. இப்போது ஐப்பானில் இந்த நவீன ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறை, கிஃபு மாகாணத்தில் ஒகாகி கியோரிட்சு வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது.இம்முறையில், கை ரேகைகளை ஸ்கேன் செய்து வங்கியில் பதிவு செய்யப்படும். மேலும் பிறந்தநாள் மற்றும் ஏடிஎம் "பின் (ரகசிய) நம்பர்' உள்ளிட்டவையும் வங்கியில் பதிவு செய்வது அவசியம். கார்டு இல்லாமல், ஏடிஎம் மையத்தில் கை ரேகையை பதிவு செய்து பணம் எடுப்பது, பண இருப்பு விவரம் அறிவது உள்ளிட்ட சேவையைப் பெற முடியும். இச்சேவை, முதல் முறையாக கிஃபு மாகாணத்தில் ஹசிமா நகரில் உள்ள வங்கியிலும், நடமாடும் ஏடிஎம் வாகனத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இம்முறை ஆச்சி, மியி மற்றும் ஷிகா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. அச்சமயத்தில் வங்கி உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியைக் கருத்தில் கொண்டே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக